சாங்காய் சீன நாட்டிலும் உலகளவிலும் மக்கள்தொகைப்படி மிகப்பெரிய நகரமாகும். இத…சாங்காய் சீன நாட்டிலும் உலகளவிலும் மக்கள்தொகைப்படி மிகப்பெரிய நகரமாகும். இது சீனாவின் வணிக மற்றும் பொருளாதார தலைநகரமாகவும் விளங்குகிறது. 23 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சாங்காய் சீனாவின் நான்கு மாநிலளவிலான நகராட்சிகளில் ஒன்றாகும். பன்னாட்டு மக்களும் வாழும் இந்நகரம் வணிகம், பண்பாடு, நிதியம், ஊடகம், கவின்கலை, தொழினுட்பம், மற்றும் போக்குவரத்தில் தாக்கமேற்படுத்தி வருகிறது. முதன்மை நிதிய மையமாக விளங்கும் சாங்காய் உலகின் மிகுந்த போக்குவரத்து மிக்க சரக்குக்கலன் துறைமுகமாகவும் உள்ளது.