pakistan turkey

பாக்கித்தான் என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அதிகாரப்பூர்வமாக பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. 24.15 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் உலகின் மிக அதிக மக்கள் தொகையுடைய ஐந்தாவ…
பாக்கித்தான் என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அதிகாரப்பூர்வமாக பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. 24.15 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் உலகின் மிக அதிக மக்கள் தொகையுடைய ஐந்தாவது நாடாக இந்நாடு திகழ்கிறது. 2023 ஆம் ஆண்டின் கணக்குப்படி உலகின் இரண்டாவது மிகப் பெரிய முசுலிம் மக்கள் தொகையை இந்நாடு கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகரம் இசுலாமாபாத் ஆகும். அதே நேரத்தில், கராச்சியானது இந்நாட்டின் மிகப் பெரிய நகரமாகவும், நிதி மையமாகவும் திகழ்கிறது. பரப்பளவின் அடிப்படையில் உலகிலேயே 33 ஆவது மிகப் பெரிய நாடு பாக்கித்தானாகும். இந்நாடானது தெற்கே அரபிக்கடல், தென்மேற்கே ஓமான் குடா தென்கிழக்கே சர் கிரிக் நீர் எல்லைக் கோடு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. கிழக்கே இந்தியா, மேற்கே ஆப்கானித்தான், தென்மேற்கே ஈரான் மற்றும் வடகிழக்கே சீனாவுடன் இது நில எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. ஓமான் குடாவில் ஓமானுடன் கடல் சார் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்நாடானது ஆப்கானித்தானின் குறுகிய வக்கான் தாழ்வாரத்தால் வடமேற்குப் பகுதியில் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
  • தலைநகரம்: இசுலாமாபாது
  • பெரிய நகர்: கராச்சி
  • ஆட்சி மொழி(கள்): உருது · ஆங்கிலம்
  • தேசிய மொழிகள்: உருது
  • பிராந்திய மொழிகள்: மாகாண மொழிகள் · பசுதூ · பஞ்சாபி · சிந்தி
  • ஏனைய மொழிகள்: 77 இற்கும் அதிகம்
  • இனக் குழுகள் (2017): 38.78% பஞ்சாபி · 18.24% பசுதூன் · 14.57% சிந்தி · 12.19% சராய்க்கி · 7.08% மகசீ · 3.02% பலோச்சி · 1.24% பிராகிசு · 4.88% ஏனையோர்
தரவை வழங்கியது: ta.wikipedia.org